×

ராபின் உத்தப்பா அரை சதம் விளாசல் லக்னோவுக்கு 211 வெற்றி இலக்கு

மும்பை: ஐபில் போட்டியில் லக்னோ அணிக்கு 211 ரன்னை வெற்றி இலக்காக சிஎஸ்கே அணி நிர்ணயித்துள்ளது. மும்பை போராபோர்ன் மைதானத்தில் ஐபில் போட்டியில் நேற்று சிஎஸ்கே-லக்னோ அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கே ஓபனரான கெய்க்வாட் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர் மொயின் -ராபின் உத்தப்பா ஜோடி லக்னோ பவுலர்களின் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.ராபின் 5வது ஓவரில் டையின் 4 பவுண்டரி அடித்து அசத்தினார். அப்போது 6வது ஓவரை வீச வந்தார் குருணால், அந்த ஓவரை சந்தித்த மொயின் அலி 16 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் ராபின் உத்தப்பா 50 ரன்னை 25 பந்தில் அடித்தார். அவர் (27பந்து, 1 சிக்சர், 8 பவுண்டரி), பிஸ்னாய் பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார். இவர்கள் 84 ரன் எடுத்து வலுவான பார்ட்னர் ஷிப் அமைத்து தந்தனர். இதையடுத்து சிவம் துபே 49 ரன்(30 பந்து 2 சிக்சர், 5 பவுண்டரி) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு முன்னதாக மொயின் அலி 35 ரன் (2 சிக்சர், 4 பவுண்டரி) அடித்து போல்ட் ஆனார். இதையடுத்து அம்பாதி ராயுடு களம் இறங்கினார். ஆரம்பத்திலேயே ரன் ரேட் அதிகரிக்கும் வகையில் பவுண்டரிகளாக விளாசினார்.

ராயுடு 27 ரன்னில் (20 பந்து, 2 சிக்சர், 2 பவுண்டர்) ரவி பிஸ்னாய் பந்தில் போல்ட் ஆனார், அவருக்கு அடுத்து கேப்டன் ரவீந்திர ஜடஜா இறங்கினார். ஆன்ரூ டை பந்தில் ரவீந்திர ஜடஜா 17 ரன் (9 பந்து,3 பவுண்டரி ) அடித்து கேட்ச் ஆனார். அடுத்த பந்திலேயே பிரிடோரியஸ், ஆன்ட்ரூ டை பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கடைசி பந்தில் டோனி தன் பாணியில் பவுண்டரி அடித்தார். அவர், டோனி 16 ரன் (6 பந்து,1 சிக்சர், 2 பவுண்டரி ) அடித்தார். இறுதியில் சிஎஸ்கே 7 விக்கெட் இழந்து 210 ரன்கள் எடுத்து லக்னோவுக்கு 211 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லக்னோ அணி சார்பில் ஆவேஸ்கான், ரவி, ஆன்ரூ டை தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags : Robin Uthappa ,Lucknow , Robin Uthappa hits 211 for Lucknow
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...